Breaking News

புல்வாமா தாக்குதலை திட்டமிட்டவர் அடுத்த பாக் ராணுவ தளபதியாகும் வாய்ப்பு அதிகரிப்பு !!

  • Tamil Defense
  • November 4, 2022
  • Comments Off on புல்வாமா தாக்குதலை திட்டமிட்டவர் அடுத்த பாக் ராணுவ தளபதியாகும் வாய்ப்பு அதிகரிப்பு !!

தற்போது பாகிஸ்தான் தரைப்படையின் Quarter Master General ஆக பணியாற்றி வருபவர் லெஃப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் ஆவார் இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI Inter Services Intelligence அமைப்பின் இயக்குனராக பணியாற்றியவர் அந்த காலகட்டத்தில் தான் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது.

தற்போது பாகிஸ்தான் தரைப்படையின் அடுத்த தளபதிக்கான தேர்வில் இவர் தான் முன்னனியில் உள்ளார், Frontier Force Regiment அதிகாரியான இவர் பாகிஸ்தான் தரைப்படையின் 30ஆவது கோர், தரைப்படை உளவுப்பிரிவு Military Intelligence, வடக்கு பிராந்திய படைகள், 10ஆவது கோர் படைப்பிரிவு ஆகியவற்றை வழிநடத்திய அனுபவம் கொண்டவர்.

இவருக்கு அடுத்தபடியாக சிந்த் ரெஜிமென்ட் அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் ஷம்சாத் மிர்சா ராஸா உள்ளார், தற்போது இந்தியா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிக்கு பொறுப்பான 10ஆவது கோர் படைப்பிரிவை வழிநடத்தி வருகிறார், தரைப்படை நடவடிக்கைகள் பிரிவின் இயக்குனர் DGMO ஆக பணியாற்றி உள்ளார், வடக்கு வசீரிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் தாலிபான்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் ஆவார்.

அடுத்தபடியாக பலூச் ரெஜிமென்டை சேர்ந்த லெஃப்டினன்ட் ஜெனரல் அசார் அப்பாஸ் உள்ளார், சுன்னி இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் ஷியா இஸ்லாமியரான இவருக்கு பதவி கிடைப்பது கஷ்டம் தான், கடந்த காலத்தில் ஜெனரல் யாஹ்யா கான் மற்றும் ஜெனரல் மூசா கான் ஆகிய ஷியா இஸ்லாமியர்கள் ராணுவ ஆகியுள்ளனர் ஜின்னாவும் ஷியா இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது, லெஃப்டினன்ட் ஜெனரல் அசார் தற்போது தலைமையகத்தில் CGS ஆக உள்ளார், 10ஆவது கோர் படையை வழிநடத்தி இந்தியாவுடன் 2003ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை உயிர்பித்தார், 10ஆவது காலாட்படை டிவிஷன் மற்றும் காலாட்படை பயிற்சி பள்ளியின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார், இவர் நியமிக்கப்பட்டால் ஈரான் உடனான பாக் உறவு வலுப்படும்.

அடுத்தபடியாக பலூச் ரெஜிமென்ட் அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் நவ்மன் மஹ்மூத் உள்ளார், 11ஆவது கோர் படைப்பிரிவு மற்றும் 7ஆவது காலாட்படை டிவிஷனை வழிநடத்தி உள்ளார், பாக் உளவுத்துறையான ISI யின் ஆய்வுகள் பிரிவு இயக்குநராகவும், தரைப்படை தலைமையகத்தில் தகவல் தொடர்பு பிரிவு இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார், தற்போது தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதல்வராக உள்ளார், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் தனது ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்ற ரீதியில் நன்கு சிந்தித்தால் இவரை தேர்வு செய்யும் வாய்ப்புகள் அதிகமாகும்.

அடுத்த இடத்தில் லெஃப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் ஹமீத் உள்ளார், Artillery ஆர்டில்லரி அதாவது பிரங்கி படை அதிகாரியான இவர் 30ஆவது கோர் மற்றும் 11ஆவது கோர் படைப்பிரிவுகளை வழிநடத்திய அனுபவம் கொண்டவர், ISI அமைப்பின் இயக்குனர் ஆக இருந்தவர், மேலும் ISI இணை இயக்குனராக இருந்த போது ஆஃப்கன் தாலிபான்களுடன் நெருங்கி உறவாடினார், தாலிபான்கள் ஆட்சியை பிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார், தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப், அமெரிக்கா மற்றும் ராணுவத்தை கடுமையாக எதிர்த்து வரும் இம்ரான் கான் ஆதரவாளரான இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான்.

கடைசி இடத்தில் ஆர்டில்லரி படை அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் மெஹம்மது அமீர் உள்ளார், தற்போது 30ஆவது கோர் படைப்பிரிவை வழிநடத்தி வருகிறார், தலைமையகத்தில் பாக் ராணுவத்தின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்,10ஆவது காலாட்படை டிவிஷனை வழிநடத்தி உள்ளார், முன்னாள் அதிபர் ஆசீஃப் அலி ஸர்தாரியின் ராணுவ செயலாளர் ஆகவும் தற்போதைய தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவின் செயலகத்தில் இயக்குனர் ஜெனரலாக பணியாற்றி உள்ளார், ஆகவே இந்த தொடர்புகள் உதவினால் இவருக்கு பதவி கிடைக்கும்.

ஆனாலும் தற்போது லெஃப்டினன்ட் ஜெனரல் அசீம் மூனிர் தான் முன்னிலையில் உள்ளார், எது எப்படியோ வருகிற நவம்பர் 29ஆம் தேதி பாகிஸ்தானுடைய சக்திவாய்ந்த அமைப்பு மற்றும் உலகின் ஒன்பதாவது பெரிய ராணுவத்தின் தளபதியாககவும் யார் பொறுப்பேற்பார் என்பது தெரிய வரும்.