கடல்சார் வர்ண பூச்சுடன் பாகிஸ்தானுடைய J-10 போர் விமானங்கள் !!
1 min read

கடல்சார் வர்ண பூச்சுடன் பாகிஸ்தானுடைய J-10 போர் விமானங்கள் !!

பாகிஸ்தான் விமானப்படை சீனா தயாரிக்கும் J-10 இலகுரக போர் விமானங்களை இயக்கி வருகிறது, சமீபத்தில் புதிய பேட்ச் J-10 போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படையில் இணைந்தன.

இந்த J-10CE ரக போர் விமானங்களில் பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்தி வரும் Mirage-5 மிராஜ் கடல்சார் தாக்குதல் போர் விமானங்களில் அடிக்கப்பட்டிருக்கும் கடல்சார் வர்ண பூச்சு பூசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் பாகிஸ்தான் விமானப்படை இந்த விமானங்களை கடல்சார் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஏற்கனவே பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் 177 Mirage 3 மற்றும் 5 PA ரக விமானங்களில் MBDA Exocet AM39 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், முறையே 350, 550 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்ட Ra’ad – 1 மற்றும் Ra’ad -2 ஆகிய க்ரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி வருவது கூடுதல் தகவல் ஆகும்.