புல்வாமா தாக்குதலை திட்டமிட்டவர் புதிய பாக் ராணுவ தளபதியாக நியமனம் !!
1 min read

புல்வாமா தாக்குதலை திட்டமிட்டவர் புதிய பாக் ராணுவ தளபதியாக நியமனம் !!

தற்போது பாகிஸ்தான் தரைப்படையின் Quarter Master General ஆக பணியாற்றி வருபவர் லெஃப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் ஆவார் இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI Inter Services Intelligence அமைப்பின் இயக்குனராக பணியாற்றியவர் அந்த காலகட்டத்தில் தான் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது.சில வாரங்கள் முன்னர் பாகிஸ்தான் தரைப்படையின் அடுத்த தளபதிக்கான தேர்வில் இவர் முன்னனியில் உள்ளதாக செய்தி வெளியிட்டோம்,

தற்போது அது உண்மையாகி உள்ளது, Frontier Force Regiment அதிகாரியான இவர் பாகிஸ்தான் தரைப்படையின் 30ஆவது கோர், தரைப்படை உளவுப்பிரிவு Military Intelligence, வடக்கு பிராந்திய படைகள், 10ஆவது கோர் படைப்பிரிவு ஆகியவற்றை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் என்பதும் இனி இந்திய பாக் எல்லை பகுதி மற்றும் காஷ்மீரில் பிரச்சினைகள் அதிகரிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக சிந்த் ரெஜிமென்ட் அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் ஷம்சாத் மிர்சா ராஸா பாகிஸ்தான் முப்படைகளின் 18ஆவது தலைமை தளபதியாக CJCSC – Chairman Joint Chiefs of Staff Committee நியமிக்கப்பட்டுள்ளார், இந்த பதவி நமது நாட்டின் CDS Chief of Defence Staff பதவிக்கு இணையானதாகும்.

லெஃப்டினன்ட் ஜெனரல் ஷம்சாத் மிர்சா ராஸா தற்போது இந்தியா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிக்கு பொறுப்பான 10ஆவது கோர் படைப்பிரிவை வழிநடத்தி வருகிறார், தரைப்படை நடவடிக்கைகள் பிரிவின் இயக்குனர் DGMO ஆக பணியாற்றி உள்ளார், வடக்கு வசீரிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் தாலிபான்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் ஆவார்.

இருவரும் இனி நான்கு நட்சத்திர அதிகாரி அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு ஜெனரல் பதவியில் பணியாற்றுவர், இவர்களை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் நியமனம் செய்ததை அந்நாட்டு தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் மர்ரியம் அவ்ரங்கசீப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.