
வியாழக்கிழமை வடகொரியா பல்வேறு முறை ராக்கெட்டுகள் மற்றும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சோதனை செய்த நிலையில் மீண்டும் போர் ஒத்திகை நடத்தி பதட்டம் ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை அன்று வடகொரியா சுமார் 80 முறை பிரங்கிகளை கடலை நோக்கி சுட்டு போர் ஒத்திகை மேற்கொண்டுள்ளது இதனால் நாளுக்கு நாள் கொரிய தீபகற்ப பகுதியில் பதட்டம் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின் மற்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் லீ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இருநாடுகளும் ஒத்துழைப்பை அதிகபடுத்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டனர்.
மேலும் வடகொரியா அணு மற்றும் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தி விட்டு தப்பி விட முடியாது வடகொரிய அரசுக்கு முடிவுரை எழுதப்படும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.