அசாம் ரைஃபிள்ஸ் அதிகாரி மற்றும் குடும்பத்தினரை கொன்ற பயங்கரவாதி NIA வால் கைது !!

  • Tamil Defense
  • November 8, 2022
  • Comments Off on அசாம் ரைஃபிள்ஸ் அதிகாரி மற்றும் குடும்பத்தினரை கொன்ற பயங்கரவாதி NIA வால் கைது !!

கடந்த 2021ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் பணியில் இணைய சென்ற அசாம் ரைஃபிள்ஸ் அதிகாரி அவரது மனைவி மகனுடன் சேர்த்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு வீரர்களுடன் கொடுரமாக கொல்லப்பட்டார்.

அசாம் ரைஃபிள்ஸ் படையின் 46ஆவது பட்டாலியன் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கர்னல் விப்ளவ் திரிபாதி, அவரது மனைவி, மகன் மற்றும் நான்கு மபாதுகாப்பு வீரர்கள் கொடுரமாக கொல்லப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம்.

நவம்பர் 5 ஆம் தேதி ரகசிய தகவலின் அடிப்படையில் NIA, அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் மணிப்பூர் காவல்துறை ஆகியோர் இணைந்து நடத்திய ஆபரேஷனில் மேற்குறிப்பிட்ட தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி மச்சுக்ரிங் ஸம்ஷிம் ஷிம்ரே கைது செய்யப்பட்டான்.

இவன் மணிப்பூர் நாகா மக்கள் முன்னனி எனும் பயங்கரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர் ஆவான், இவன் மீது மணிப்பூர் மாநிலம் சுராசந்தபூர் மாவட்டம் சைன்காட் காவல்நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, இவன் இதுவரை தலைமறைவாக இருந்து வந்தான்.

கடந்த நவம்பர் 27ஆம் தேதி வழக்கை எடுத்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு இவனை பற்றிய தகவலுக்கு 4 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது, தற்போது இவன் தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளான்.

பயங்கரவாதி மச்சுக்ரிங் ஸம்ஷிம் ஷிம்ரே மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள யய்காங்கபோங்பி எனும் பகுதியில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டதும் இவன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 6 பிரிவுகள், ஆயுத சட்டத்தின் 1 பிரிவு, பயங்கரவாத தடை சட்டத்தின் 5 பிரிவுகள், வெடிபொருள் சட்டத்தின் ஒரு பிரிவு என சுமார் 12 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.