ரா அலுவலகத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட உளவுத்துறை அதிகாரி !!

  • Tamil Defense
  • November 20, 2022
  • Comments Off on ரா அலுவலகத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட உளவுத்துறை அதிகாரி !!

இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான RAW Research & Analysis Wing ராவை சேர்ந்த அதிகாரி ஒருவர் தலைநகர் தில்லியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதுவும் தெற்கு தில்லியில் உள்ள ரா அமைப்பின் அலுவலகத்தின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

தற்கொலை செய்து கொண்ட அதிகாரியின் பெயர் அனிகேத் குமார் ஆகும் இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது, இவர் செவ்வாய் கிழமை காலை அலுவலகம் வந்த சற்று நேரத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது, இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.