இந்திய தரைப்படை இந்த ஆண்டு புதிய டிஜிட்டல் சீருடையை அறிமுகப்படுத்தி பயன்பாட்டை துவங்கியது இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று அதற்கான காப்புரிமையை தனதாக்கி பதிவு செய்து உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுபற்றி இந்திய தரைப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொல்கத்தாவில் அமைந்துள்ள காப்புரிமை கட்டுபாட்டு பதிவாளரின் அலுவலகத்தில் இதற்கான பதிவு நிறைவு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலமாக இனி யாரும் இந்திய தரைப்படையின் சீருடையை தயாரிக்க முர அப்படி தயாரித்தால் இந்திய தரைப்படை அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கி கொடுக்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய தரைப்படை இதுவரை 15 நகரங்களில் உள்ள CSD கேண்டின்கள் மூலமாக 50,000 புதிய சீருடைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இனி சுமார் 11.70 லட்சம் புதிய சீருடைகள் 2023ஆம் ஆண்டு இறுதிக்கு முன் வாங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.