2035 வாக்கில் சொந்த விண்வெளி மையத்தை விரைந்து கட்டி முடிக்க இந்தியா திட்டம் !!

  • Tamil Defense
  • November 7, 2022
  • Comments Off on 2035 வாக்கில் சொந்த விண்வெளி மையத்தை விரைந்து கட்டி முடிக்க இந்தியா திட்டம் !!

இந்தியா வரும் 2035ஆம் ஆண்டு வாக்கில் விண்வெளியில் நாசா, சீனாவின் விண்வெளி ஆய்வு மையங்களை போன்றோரு ஆய்வு மையத்தை விரைந்து கட்டமைக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

அந்த வகையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO Indian Space Research Organistaion இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, அதன் மூலம் அதிக எடையுள்ள கட்டுமான பொருட்களை விண்வெளிக்கு எடுத்து செல்ல உதவும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கனரக ராக்கெட்டை தயாரிக்க உள்ளனர்.

NGLV – Next Generation Launch Vehicle அதாவது அடுத்த தலைமுறை ஏவு வாகனம் என அழைக்கப்படும் இந்த ராக்கெட்டை தற்போது ISRO வடிவமைத்து வருவதாகவும் இதன் மேம்பாட்டு பணியில் இணைந்து செயல்பட இந்திய தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்வர வேண்டும் எனவும் இஸ்ரோ தலைவர் முனைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் இந்திய தொழில்துறை எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறோம் இதற்கு நாங்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியாது ஆகவே அவர்களும் இதில் முதலீடு செய்து நமக்காக இந்த ராக்கெட்டை தயாரிக்க வேண்டும் என விரும்புகிறோம்.

மேலும் அவர் பேசும்போது சுமார் 10 டன் எடையை GTO – Geostationary Transfer Orbit சுற்றுவட்ட பாதைக்கும் 20 டன் எடையை LEO – Low Earth Orbit சுற்றுவட்ட பாதைக்கும் எடுத்து செல்லும் திறன் கொண்டதாக அந்த ராக்கெட் இருக்கும் என சோம்நாத் தெரிவித்தார்.

மற்றொரு மூத்த இஸ்ரோ விஞ்ஞானி கூறுகையில் இந்த கனரக ராக்கெட் விண்வெளி மையம் அமைப்பது, தொலைதூர விண்வெளி ஆராய்ச்சி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம், சரக்கு போக்குவரத்து மற்றும் ஒரே நேரத்தில் பல்வேறு செயற்கைகோள்களை அனுப்புவது போன்றவற்றிற்கு பேருதவியாக இருக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.