புதிய தனியார் ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக சோதனை !!

  • Tamil Defense
  • November 12, 2022
  • Comments Off on புதிய தனியார் ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக சோதனை !!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள VSSC Vikram Sarabhai Space Center விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் புதிய தனியார் ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Agnikul Cosmos Pvt Ltd அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்து Agnilet அக்னிலெட் ராக்கெட் என்ஜினை கடந்த 4ஆம் தேதி வெற்றிகரமாக TERLS Thumba Equatorial Rocket Launching Station தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் வைத்து சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனை 15 நொடிகள் நடைபெற்றுள்ளது, இந்த என்ஜின் 1.4 கிலோ நியூட்டன் திறன் கொண்டதாகும், திரவ ஆக்ஸிஜன் மற்றும் வானூர்தி எரிபொருள் ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தும் செமி க்ரையொஜெனிக் என்ஜின் ஆகும்.

இதனை விஞ்ஞானிகள் 3D Printing Technology முப்பரிமாண அச்சு தொழில்நுட்பம் மூலமாக வடிவமைத்துள்ளனர், மேலும் இந்த என்ஜினை உருவாக்க ICONEL – 718 ரக உலோகத்தை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO மற்றும் Agnikul Cosmos Pvt Ltd ஆகிய நிறுவனங்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தம் மூலமாக இந்த சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.