இந்திய கடலோர காவல்படையின் புதிய தளவாடங்கள் !!
1 min read

இந்திய கடலோர காவல்படையின் புதிய தளவாடங்கள் !!

இந்திய கடலோர காவல் படையானது நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு அதிநவீன தளவாடங்களை படையில் இணைத்து வருகிறது இனியும் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இனி அடுத்தடுத்து பல்வேறு நவீன தளவாடங்களை வாங்க திட்டமிட்டு உள்ளது அதை பற்றி காணலாம்.

சேத்தக் ஹெலிகாப்டர்களுக்கான மாற்று ஹெலிகாப்டர்களாக சுதேசி Maritime ULH Utility Light Helicopter கடல்சார் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள்.

10 டன்கள் எடையிலான புதிய Multi Role Helicopters அதிநவீன பல திறன் ஹெலிகாப்டர்கள்,

கப்பல்களில் பயன்படுத்தும் வகையிலான 10 RUAV Rotary Unmanned Aerial Vehicles எனப்படும் ஹெலிகாப்டர் போன்ற ஆளில்லா வானூர்திகள்.

6 Offshore Patrol Vessels OPV கடலோர ரோந்து கலன்கள் மற்றும் 6 AIRBUS CASA C-295 Maritime Patrol & SAR (Search and Rescue) கடல்சார் ரோந்து கண்காணிப்பு மற்றும் தேடல் மீட்பு பணி விமானங்கள்.

இதில் C-295 ரக விமானங்களை இந்திய கடலோர காவல்படை MMMA – Multi Mission Maritime Aircraft பல நடவடிக்கை கடல்சார் விமான திட்டத்தின் கீழாக வாங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் அதிநவீன AESA Active Electronically Scanned Array எனப்படும் ரேடார் இருக்கும், இதன் காரணமாக கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை துல்லியமாக மேற்கொள்ள முடியும்.

ஏற்கனவே இந்த வகை விமானங்கள் இந்திய விமானப்படைக்காக குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள Airbus – TATA TASL தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் நிலையில் இந்திய கடலோர காவல் படைக்கான விமானங்களும் அங்கு தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.