
Larsen & Toubro நிறுவனம் தான் வடிவமைத்து மேம்படுத்திய SOV-400 ரக சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படையின் கடலோர பாதுகாப்புக்காக வழங்க முன்வந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது லார்சன் அண்ட டூப்ரோ நிறுவனம் அந்த வகை நீர்மூழ்கி கப்பலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக ஏற்றுமதி சந்தைக்கென விளம்பரம் செய்து வருகிறது.
இந்த 550 டன்கள் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பல்களில் இரண்டு 533 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட கனரக நீரடிகணைகளை கொண்டிருக்கும், இவற்றை சிறிய பட்ஜெட் கொண்ட சிறிய ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு அளிக்க முன்வந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு கண்காட்சியில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன அதிகாரிகள் இந்திய கடற்படை இந்த நீர்மூழ்கி கப்பல் திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தது கூடுதல் தகவல் ஆகும்.