பிரேசில் பிரங்கி வாகன போட்டியில் தோல்வி அடைந்த இந்தியாவின் WhAP Kestrel !!

  • Tamil Defense
  • November 28, 2022
  • Comments Off on பிரேசில் பிரங்கி வாகன போட்டியில் தோல்வி அடைந்த இந்தியாவின் WhAP Kestrel !!

பிரேசில் தரைப்படை ஒரு இலகுரக டாங்கியை படையில் இணைக்க முயற்சி செய்து வந்தது இதன் ஒரு பகுதியாக அதற்கான தேர்வை அறிவித்த நிலையில் இந்தியாவின் DRDO TATA கூட்டு தயாரிப்பான WhAP KESTREL கவச வாகனமும் கலந்து கொண்டது.

தற்போது இந்த தேர்வின் முடிவுகளை பிரேசில் வெளியிட்டுள்ளது, அதில் இத்தாலி நாட்டின் Iveco ஐவெகோ வாகன நிறுவனம் மற்றும் OTO Melara ஒடோ மெலாரா ஆயுத தயாரிப்பு நிறுவனம் ஆகியவை கூட்டாக தயாரித்த Centauro – 2 தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த 8×8 இலகுரக டாங்கி தேர்வில் கலந்து கொண்ட இஸ்ரேலிய Eitan எய்ட்டன், UAE ஐக்கிய அரபு அமீரகத்தின் Wahash FSV மற்றும் இந்தியாவின் கெஸ்ட்ரெல் ஆகியவற்றில் டாங்கிகளுக்கான துப்பாக்கி இன்னும் பொருத்தப்படாமல் இருப்பதும் அப்படியான வாகனங்கள் சேவையில் இல்லாததும் நிராகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் டாடா குழுமம் DRDO TATA இணைந்து உருவாக்கிய Kestrel கெஸ்ட்ரெல் கவச வாகனம் மட்டுமே இந்திய தரைப்படையில் சேவையில் உள்ளது ஆனால் 105 அல்லது 120 மில்லிமீட்டர் துப்பாக்கி பொருத்தப்பட்ட டாங்கி வடிவம் இன்னும் சோதனை வாகனமாகவே உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.