சமீபத்தில் நியூஸ்-18 News18 ஊடகத்திற்கு நமது DRDO Defence Research & Development Organisation அமைப்பின் விஞ்ஞானிகள் பேட்டி அளித்தனர் அப்போது சுமார் 80% அளவுக்கு இந்திய தயாரிப்பு பாகங்களை கொண்ட காவேரி என்ஜின் சோதனையில் உள்ளதாகவும் 2024ஆம் ஆண்டு வாக்கில் அது தர சான்றிதழ் பெறும் எனவும் கூறியுள்ளனர்.
இந்த என்ஜின் சூப்பர் க்ரூஸ் திறன் கொண்டதாகும், உலகில் சில என்ஜின்கள் மட்டுமே இந்த திறன் கொண்டவையாகும், இந்த காவேரி என்ஜினால் 46 கிலோ நியூட்டன் ஆற்றலை வெளிபடுத்த முடியும் எனவும் தற்போது தரை சோதனைகள் மற்றும் அதிக உயர பகுதி சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக விரைவில் நீண்ட நேர உழைக்கும் தன்மையை பரிசோதிக்கும் சோதனையிலும் ஈடுபடுத்தப்பட உள்ளது, அதன் பிறகு CEMILAC Center for Military Airworthiness & Certification அதாவது ராணுவ வானூர்தி தர கட்டுபாட்டு அமைப்பின் தர சான்றிதழை பெறும்.
அதே நேரத்தில் மற்றொரு புறம் DRDO அமைப்பின் ஒரு பிரிவான GTRE Gas Turbine Research Establishment அமைப்பு இந்த என்ஜினுக்கான Afterburner பகுதியை தயாரித்து வருகிறது இதன் மூலம் சுமார் 74 கிலோ நியூட்டன் ஆற்றலை இந்த என்ஜினால் உருவாக்க முடியும்.
Afterburner பாகம் கொண்ட காவேரி என்ஜின் சுதேசி பயிற்சி ஜெட் போர் விமானமான HLFT-42 விமானத்தில் பயன்படுத்தப்படும் , சூப்பர்க்ரூஸ் திறன் கொண்ட காவேரி என்ஜின் UCAV- Unmanned Combat Aerial Vehicle அதாவது இந்தியா சொந்தமாக வடிவமைத்து தயாரித்து வரும் ஆளில்லா போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.