புதிய மலையக தாக்குதல் பிரங்கியை உருவாக்கிய கல்யாணி நிறுவனம் !!

  • Tamil Defense
  • November 28, 2022
  • Comments Off on புதிய மலையக தாக்குதல் பிரங்கியை உருவாக்கிய கல்யாணி நிறுவனம் !!

இந்திய தனியார் துறை நிறுவனமான Kalyani Strategic Systems Limited (KSSL) ஒரு புதிய அதிநவீன மலையக தாக்குதல் பிரங்கியை உருவாக்கி உள்ளது, இது 155mm மில்லிமீட்டர் 72 Caliber காலிபர் (155/72) திறன் கொண்டதாகும்.

Janes Intelligence எனும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பாதுகாப்பு துறை ஆய்வு நிறுவனமானது இந்த பிரங்கி MArG ER Mountain Artillery Gun – Extended Range அதாவது தாக்குதல் தொலைவு அதிகரிக்கப்பட்ட மலையக தாக்குதல் பிரங்கி என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த MArG ER பிரங்கியின் தாக்குதல் வரம்பு 41 கிலோமீட்டர் எனவும் இதன் எடை 8000 கிலோ எனவும் இது இழுத்து செல்லும் வகையிலான பிரங்கி எனவும் கூறப்படுகிறது ஆனால் ஏற்கனவே உள்ளது போல லாரியில் பொருத்தப்பட்ட வகை தயாரிக்கப்படுமா என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.

மேலும் இந்த பிரங்கி ஏற்கனவே கல்யாணி நிறுவனம் உருவாக்கிய 155 mm மில்லிமீட்டர் 39 Caliber காலிபர் திறன் கொண்ட UL MArG Ultra Light Mountain Artillery Gun அதாவது இலகுரக மலையக பிரங்கியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

இந்த 155/39 காலிபர் பிரங்கியானது வெறுமனே 6000 கிலோ எடை மட்டுமே கொண்டதாகும், இந்த வகை பிரங்கிகளை தான் சமீபத்தில் அர்மீனியா இந்தியாவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.