கடந்த புதன்கிழமை அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO இஸ்ரோ தனது மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டுக்கான க்ரையொஜெனிக் என்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த க்ரையொஜெனிக் என்ஜினுக்கு CE20 என பெயர் வைக்கப்பட்டுள்ளது, இந்த என்ஜினை இஸ்ரோவின் கனரக ராக்கெட்டான LVM Mark – 3 யில் பயன்படுத்த உள்ளதாக விண்வெளி துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த என்ஜினுடைய சிறப்பு என்னவென்றால் இனி கூடுதல் அல்லது அதிகளவிலான எரிபொருள் இன்றி சுமார் 450 கிலோ எடை வரையிலான பொருட்களை விண்ணில் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனையின் போது முதல் 40 நொடிகளுக்கு சுமார் 20 டன்கள் உந்துசக்தியை வெளிப்படுத்தியும் பின்னர் அடுத்தகட்டமாக 21.8 டன்களுக்கு உந்துசக்தி அதிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதும் இதன்மூலம் இந்தியா மற்றொரு சாதனை படைத்துள்ளது கூடுதல் சிறப்பு ஆகும்.