ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பாட்டுக்கு வந்த இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு !!

  • Tamil Defense
  • November 1, 2022
  • Comments Off on ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பாட்டுக்கு வந்த இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு !!

இஸ்ரேலிய பராக் வான் பாதுகாப்பு அமைப்பு Barak Air Defence system ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவத்தால் துபாய் நகருக்கு தெற்கே உள்ள அல் தாஃப்ரா படைத்தளத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன அவற்றில் பராக் வான் பாதுகாப்பு அமைப்பு லாஞ்சர்கள் மற்றும் எல்டா நிறுவனத்தின் Elta EL/M-2084 radar ரேடார் ஆகியவை காணப்படுகின்றன.

இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்பனை செய்ய இஸ்ரேலிய அரசு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது ஆனால் இதன் விற்பனை நடைபெற்றதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது தகவலோ வெளியாகவில்லை.

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்க தயாரிப்பு THAAD – Terminal High Altitude Air Defence மற்றும் PATRIOT PAC-3 ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது ஆனால் அவற்றின் ஒவ்வொரு ஏவுகணைகளும் அதிக விலை மதிப்புமிக்கவை ஆகும், ஆகவே அவற்றை பயன்படுத்துவது முட்டாள்தனம்.

ஆகவே தான் தற்போது இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கி உள்ளது, ஏமன் நாட்டில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஈரானிய மற்றும் ஹெஸ்புல்லாஹ் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதை முறியடிக்க இவை உதவும் என்றால் மிகையாகாது.