ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் உக்ரைன் மூத்த அதிகாரி !!

  • Tamil Defense
  • November 10, 2022
  • Comments Off on ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் உக்ரைன் மூத்த அதிகாரி !!

உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கியின் மிகவும் நெருங்கிய அதிகாரி ஒருவர் ஈரான் மீது உடனடியாக தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஈரான் ரஷ்ய படைகளுக்கு ஏவுகணைகள் மற்றும் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ஆகியவற்றை சப்ளை செய்து வருவதால் அவற்றை தயாரிக்கும் ஈரானிய தொழிற்சாலைகள் மீது உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஈரான் முன்னர் ரஷ்யாவுக்கு ஆயுதம் சப்ளை செய்யவில்லை என கூறிவந்த நிலையில் சமீபத்தில் அதனை ஒப்பு கொண்டது இதையடுத்து மிகைல் பொடோல்யாக் ஈரானின் இத்தகைய குற்ற உணர்ச்சி இல்லாத செயலை இனியும் அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் அவர் ஈரான் மீது அமெரிக்கா அல்லது நேட்டோ என யார் தாக்குதல் நடத்த வேண்டும் எப்போது தாக்குதல் நடத்த வேண்டும் என்பது பற்றி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.