
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையோர பகுதியை தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற நபரை BSF Border Security Force எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அதாவது நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் சர்வதேச எல்லையோர பகுதியில் அமைந்துள்ள அர்னியா செக்டார் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையின் ரோந்து குழு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது ஒருவர் ஊடுருவ முயற்சிப்பதை அவர்கள் கண்டனர்.
இதை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த நபரை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர் ஆனால் அந்த நபர் அதனையும் மீறி மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளவே அந்த நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையின் ஜம்மு பகுதி IG டி கே பூரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.