பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க ஆர்வம் காட்டும் இந்தோனேசியா !!

  • Tamil Defense
  • November 12, 2022
  • Comments Off on பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க ஆர்வம் காட்டும் இந்தோனேசியா !!

சமீபத்தில் இந்தோனேசிய நாட்டின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் இந்தியா ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரம்மாஸ் ஏவுகணையும் காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.

பிரம்மாஸ் ஏவுகணை அரங்கை இந்தோனேசிய ராணுவ அதிகாரிகள் பலமுறை வந்து பார்த்து சென்றனர், மேலும் அவர்கள் இதற்கான விலை விவரங்களையும் கோரியுள்ளனர், அனேகமாக அடுத்த ஆண்டு இரு நாடுகளும் இதுகுறித்து பேச்சுவார்த்தைகளை துவங்கும்.

ஆகவே பாதுகாப்பு நிபுணர்கள் கூறும்போது விரைவில் இந்தோனேசியா தனது கடலோர பாதுகாப்புக்காக இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் ஏவுகணைகளை வாங்கும் இரண்டாவது நாடாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்தோனேசியா பல ஆயிரம் தீவுகளையும் 200 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சுமார் 83,000 கிலோமீட்டர் நீள கடற்கரை ஆகியவற்றை கொண்டுள்ளது மேலும் சீனா அச்சுறுத்தல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.