வருகிற நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக தனியார் துறை தயாரித்த ராக்கெட் ஒன்று செயற்கைகோளுடன் விண்ணில் பாய உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரை சேர்ந்த Skyroot Aerospace ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த Vikram-S விக்ரம்-எஸ் ராக்கெட் நவம்பர் 12-16 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாள் ஏவப்படும்.
இந்த நடவடிக்கைக்கு பரம்ப் Parambh என பெயரிடப்பட்டுள்ளது, விக்ரம் எஸ் ராக்கெட் மூன்று செயற்கைகோள்களை சுமந்து கொண்டு ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவால் ஏவப்பட உள்ளது, இதற்கான அனுமதியை IN-SPACe கட்டுபாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மூன்று வெவ்வேறு விதமான ராக்கெட்டுகளை தயாரித்துள்ளது 1) Vikram 1/S – இதனால் 480கிலோ எடையை சுமக்க முடியும், 2) Vikram-2 இதனால் 595 கிலோ எடையை சுமக்க முடியும்,3) Vikram-3 இதனால் 815 கிலோ எடையை சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் ஏவப்பட உள்ள VIKRAM-S விக்ரம்-எஸ் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் என்ஜினுக்கு KALAM-100 கலாம்-100 என பெயர் சூட்டப்பட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.