
முன்று மாதங்கள் முன்னர் நார்வே நாட்டுக்கு சொந்தமான மால்டா நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பலான MT HEROIC IDUN ஆகஸ்ட் 8ஆம் தேதி நைஜீரிய கடல் எல்லையோரம் நங்கூரமிட்டு நின்றிருந்த நிலையில்
நைஜீரிய அரசு இந்த கப்பல் கச்சா எண்ணெயை திருட்டு தனமாக கொண்டு செல்ல வந்த கப்பல் என கூறி அருகிலுள்ள கினி நாட்டு கடற்படை உதவியுடன் கப்பலை கரைக்கு கொண்டு குழுவினர் அனைவரையும் கைது செய்தது.
இவர்களில் கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த பல இந்தியர்களும் உள்ளனர், அவர்கள் விரைவில் தங்கள் அனைவரையும் கினி நாட்டில் இருந்து நைஜீரியா கொண்டு செல்ல நைஜீரிய ராணுவத்தினர் வர உள்ளதாகவும் அதற்கு பிறகு தங்களுக்கு என்னவாகும் என தெரியாது ஆகவே காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம், நைஜீரியா மற்றும் கினி நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் நார்வே நாட்டு நிறுவனம் ஆகியவை மாலுமிகளை விடுவிக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.