பறக்கும் நீரடிகணைகளை பெற உள்ள நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் !!

  • Tamil Defense
  • November 24, 2022
  • Comments Off on பறக்கும் நீரடிகணைகளை பெற உள்ள நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் !!

அமெரிக்காவின் போயிங் BOEING நிறுவனம் தயாரிக்கும் P8 Poseidon தொலைதூர கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி கப்பல் வேட்டை விமானங்கள் உலக பிரசத்தி பெற்றவை ஆகும் மேலும் இவை இந்திய கடற்படையாலும் பயன்படுத்தி வரப்படுகின்றன.

தற்போது இந்த நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் மேலும் அதிக வலுவை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அந்த வகையில் தற்போது High Altitude Anti Submarine Warfare Weapon (HAAWC) அதாவது அதிக உயரத்தில் இருந்து செலுத்தப்படும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதத்தை இவை பெற உள்ளன.

இந்த HAAWC என்பது Mk54 மார்க்-54 ரக இலகுரக நீரடிகணைகளை சற்றே மேம்படுத்தி மாற்றியமைத்து உருவாக்கப்பட்டதாகும்,இவற்றில் இறக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன ஆகவே எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் தொலைதூரத்தில் இருந்து கொண்டே இவற்றை ஏவி நீர்மூழ்கி கப்பல்களை அழிக்க முடியும் என கூறப்படுகிறது.

இப்போது அமெரிக்க கடற்படை இவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டு உள்ளதாகவும், இதற்கு தேவையான அனைத்து உப கருவிகள் மற்றும் அமைப்புகளையும் சேர்த்து தயாரித்து வழங்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும், இந்த ஆயுதம் இயங்கும் முறையை பார்க்கலாம்.

சுமார் 30,000 அடி உயரத்தில் இருந்து கொண்டு இத்தகைய மார்க்-54 பறக்கும் நீரடிகணைகளை செலுத்த முடியும் வழிகாட்டி அமைப்பின் உதவியோடு மெதுவாக இலக்கை நோக்கி வானில் பறந்து செல்லும் இந்த ஆயதம் இலக்கை நெருங்ககயதும் இறக்கை பிரிந்து நீரடிகணை பாராசூட் மூலமாக கடலுக்குள் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும், இதன் தாக்குதல் வரம்பு சுமார் 20 மைல்கள் என தெரிகிறது.

தற்போது இந்த விமானங்களை அமெரிக்கா தவிர இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து நார்வே ஆகிய நாடுகள் பயன்படுத்தி வரும் நிலையில் தென்கொரியா ஜெர்மனி நியூஸிலாந்து ஆகியவை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன.

ஒருவேளை இந்த பறக்கும் நீரடிகணைகளை இந்த நாடுகளுக்கு குறிப்பாக இந்தியா தென்கொரியா ஆஸ்திரேலியா நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு கொடுக்கும் பட்சத்தில் சீன கடற்படைக்கான சவால் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.