இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்யப்பட்ட 6 அதிநவீன அமெரிக்க ஹெலிகாப்டர்கள் !!

  • Tamil Defense
  • November 17, 2022
  • Comments Off on இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்யப்பட்ட 6 அதிநவீன அமெரிக்க ஹெலிகாப்டர்கள் !!

அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்களான சிகோர்ஸ்கி Sikorsky மற்றும் Lockheed Martin லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவை கூட்டாக தயாரித்த ஆறு MH-60 ROMEO ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து லாக்ஹீட் மார்ட்டின் இந்திய பிரிவான Lockheed Martin India வின் தலைமை செயல் அதிகாரி வில்லியம் ப்ளேயர் கூறும்போது முதல் மூன்று ஹெலிகாப்டர்கள் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள INS GARUDA கருடா கடற்படை விமான தளத்தில் இருந்து இயங்கி வருவதாகவும்

இவை தவிர மேலும் மூன்று ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவின் சான் டியகோ நகரில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், இவை தற்போது அங்கேயே இயங்கி வருவதாகவும் இதற்கு காரணம் இந்திய கடற்படை இந்திய கடற்படை விமானிகளின் MH-60 ROMEO ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சி காலத்தை அதிகபடுத்தி உள்ளது ஆகும் என்றார்.

சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் மேற்குறிப்பிட்ட MH – 60 ROMEO ரக ஹெலிகாப்டர்களில் 24 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான முடிவை இந்தியா மற்றும் அமெரிக்கா கடந்த 2020ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் அறிவித்தன, இந்த டெலிவரி வருகிற 2025ஆம் ஆண்டு நிறைவடையும் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான MH – 60 ROMEO ஹெலிகாப்டர்கள் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கோரிக்கையின்படி இந்திய தேவைக்கேற்ற சில பிரத்தியேக அம்சங்களை பெற்றுள்ளதாகவும் குறிப்பாக இந்திய தயாரிப்பு அமைப்புகள் சிலவை இவற்றில் உள்ளதாகவும், இந்தியாவின் HAL நிறுவனம் IFF – Identification Friend or Foe அதாவது எதிரி அல்லது நட்பு தளவாடங்களா என கண்டறியும் அமைப்பு உட்பட பல அமைப்புகளை டெலிவரி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்காக லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்திய பொதுத்துறை நிறுவனங்களான BEL Bharat Electronics Limited மற்றும் HAL Hindustan Aeronautics Limited ஆகியவையுடன் இணைந்து செயல்பட்டு வருவதும் இந்த ஹெலிகாப்டர்களில் APS-153 பல திறன் தொலைதூர மற்றும் குறுந்தூர கண்காணிப்பு ரேடார் உள்ளது கூடுதல் தகவலாகும்.