ஒமன் கடற்படையுடன் இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சி !!

இந்த ஆண்டு நவம்பர் 19 – 24 அதாவது நேற்று வரை இந்திய கடற்படை மற்றும் ஒமன கடற்படை ஆகியவை ஒமன் கடலோர பகுதியில் 13ஆவது ஆண்டாக தொடர்ந்து நஷீம் அல் பஹார் இருதரப்பு பயிற்சிகளில் ஈடுபட்டன.

துறைமுக கட்டம், ஆழ்கடல் கட்டம், பயிற்சி முடிவுகளின் ஆய்வு கட்டம் என மூன்று பகுதிகளாக நடைபெற்ற இந்த பயிற்சிகள் ஒமன் நாட்டின் கடல் பகுதியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இந்திய கடற்படையின் சார்பில் ஃப்ரிகேட் கப்பலான INS TRIKAND த்ரிகாந்த், கடலோர ரோந்து கலன் INS SUMITRA சுமித்ரா மற்றும் DORNIER டோர்னியர் கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை கலந்து கொண்டதாகவும்

ஒமன் கடற்படை சார்பில் RNOS AL SHINAS, RNOS AL SEEB ஆகிய கலன்கள், ஒரு கடல்சார் ரோந்து விமானம் மற்றும் ஒமன் விமானப்படையின் BAE HAWK ஹாவ்க் ஜெட் பயிற்சி விமானங்கள் ஆகியவை கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டு பயிற்சியில் கடல்பரப்பு நடவடிக்கை, வான் பாதுகாப்பு, கண்காணிப்பு, கப்பல் இடைமறிப்பு மற்றும் சோதனையிடல் ஆகிய பயிற்சிகளும் பின்னர் விளையாட்டு போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டன, கடைசி கட்ட பயிற்சிகள் துக்கம் நகரில் உள்ள ஒமன் கடற்படை தளத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.