ரஷ்யாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் சுற்றுபயணம்!!

  • Tamil Defense
  • November 8, 2022
  • Comments Off on ரஷ்யாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் சுற்றுபயணம்!!

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ரஷ்யாவுக்கு அலுவல் ரீதியான சுற்றுபயணமாக சென்று அங்கு ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் அவர்களை இன்று சந்தித்து பேச உள்ளார்.

அப்போது இந்த சந்திப்பில் இருநாடுகள் இடையேயான தொழில்நுட்பம், ராணுவம், நிதி, பொருளாதாரம், எரிசக்தி, அறிவியல், மனிதாபிமான துறைகளில் நெருங்கி செயலாற்றுவது குறித்தும்

ஐக்கிய நாடுகள் சபை, ஷாங்காய் ஒத்துழைப்பு கவுன்சில், G20, பிரிக்ஸ் , ரஷ்யா-இந்தியா-சீனா கூட்டமைப்பு ஆகிய சர்வதேச அமைப்புகளில் இணைந்து செயலாற்றுவது குறித்தும் இரண்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் எனவும் இந்திய வெளியுறவு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஆசியா-பசிஃபிக் பகுதியில் பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது, சிரியா, ஆஃப்கானிஸ்தான், உக்ரைன் நிலவரங்கள் மற்றும் ஈரான் அணுசக்தி திட்டம் ஆகிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.