இந்திய ராணுவத்திற்கு அதிக உயர ட்ரோனை தயாரித்து தர விரும்பும் இந்திய நிறுவனம் !!

  • Tamil Defense
  • November 1, 2022
  • Comments Off on இந்திய ராணுவத்திற்கு அதிக உயர ட்ரோனை தயாரித்து தர விரும்பும் இந்திய நிறுவனம் !!

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் இந்திய தனியார் துறை நிறுவனம் தான் Johnnette Technologies ஜாண்ணெட் டெக்னாலஜிஸ் ஆகும், இந்த நிறுவனம் ஆளில்லா வானூர்திகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனம் இந்திய முப்படைகளுக்கும் JF-5 எனும் HALE High Altitude Long Endurance அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கக்கூடிய ஆளில்லா வானூர்தி ஒன்றை தயாரித்து தர விருப்பம் தெரிவித்துள்ளது.

போர் விமானங்களை போலவே பல்வேறு நடவடிக்கைகளை இது மேற்கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் இதன் வேகம் மற்றும் பிரத்தியேக வடிவமைப்பு ஆபத்துகளில் இருந்து நழுவி செல்ல உதவும் மேலும் குறுகிய நேரத்திலேயே ஆயுதங்களை இணைத்து வான்வழி கண்காணிப்பை மேற்கொள்ள உதவும் என கூறப்படுகிறது.

இது ஒரு அடுத்த தலைமுறை ஆளில்லா தாக்குதல் மற்றும் கண்காணிப்பு விமானமாகும் இதனை கொண்டு நிலத்திலும் கடலிலும் தாக்குதல் நடத்த உதவும் மிகப்பெரிய அளவிலான பகுதியில் கண்காணிப்பை மேற்கொள்ள உதவும் எனவும் இந்த நிறுவனத்தின் நிறுவனரான முன்னாள் கடற்படை அதிகாரி லெஃப்டினன்ட் கமாண்டர் ஜாண் லிவிங்ஸ்டன் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது JF-5 ட்ரோன் 5.6 டன்கள் எடையுடன் தொடர்ந்து 25 மணி நேரத்தில் சுமார் 8500 கிலோமீட்டர் தொலைவு வரை பறக்கும் எனவும், JF-4 எனும் ட்ரோன் MALE Medium Altitude Long Endurance நடுத்தர உயரத்தில் தொலை தூரம் பறக்கும் ட்ரோனையும் தயாரித்துள்ளதாகவும்,

இந்த JF-4 ரக ஆளில்லா விமானம் 1300 கிலோ எடை கொண்டதாக இருக்கும் மேலும் சுமார் 20 மணி நேரம் தொடர்ந்து 2000 கிலோமீட்டர் தொலைவு வரை பறக்கும் எனவும் மேலும் JF-2 மற்றும் JM-2 ஆகிய சிறிய கையிலிருந்து ஏவி பயன்படுத்தக்கூடிய ட்ரோன்களையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லெஃப்டினன்ட் கமாண்டர் ஜாண் லிவிங்ஸ்டன் பிரதமர் அலுவலகம் தலையிட்டு காரியங்களை விரைவாக நடத்த உதவ வேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும் இதற்கு காரணம் தற்போது பிரதமர் அலுவலகத்தால் மட்டுமே இதனை சாத்தியமாக்க முடியும் எனவும் கூறியது கூடுதல் தகவல் ஆகும்.