கடலடி ட்ரோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனம் !!

  • Tamil Defense
  • November 17, 2022
  • Comments Off on கடலடி ட்ரோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனம் !!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் தான் சாகர் டிஃபன்ஸ் என்ஜினியரிங் ப்ரைவேட் லிமிடெட் Sagar Defence Engineering Pvt Ltd ஆகும், இந்த நிறுவனம் இந்திய கடற்படையுடன் இணைந்து தமாகவே இயங்கும் ஆளில்லா கடலடி வாகனங்களை உருவாக்கி வருகிறது.

இவற்றை பயன்படுத்தி இந்திய கடற்படையால் கடலடியில் உள்ள கண்ணிவெடி அமைப்புகள் பல்வேறு சென்சார் அமைப்புகளை கொண்டு கண்டுபிடித்து அடையாளம் கண்டு பின்னர் அவற்றை செயலிழக்க செய்ய முடியும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் தற்போது இந்த மிக மிக ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் கடற்படை நீர்மூழ்கி நீச்சல் வீரர்களின் உயிர் காக்கப்படும் மேலும் இந்த ஆளில்லா கடலடி ட்ரோன்கள் சுமார் 100 மீட்டர் ஆழம் வரை சென்று இயங்கும் திறன் கொண்டவையாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் இந்த நிறுவனம் கடலுக்கு அடியே பயணித்து கண்ணிவெடிகளை நிலைநிறுத்தி செயல்படுத்தும் ட்ரோன்களையும் உருவாக்கி வருவதாகவும் இரண்டு வகையான ட்ரோன்களும் தாமாகவே இயங்கும் திறன் மற்றும் குழுவாக இயங்கும் திறன்களை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.