ட்ரோன் அழிப்பு அமைப்பை உருவாக்கும் இந்திய நிறுவனம் !!

இந்திய தனியார் துறை நிறுவனமான EDITH Defence Systems ஈடித் டிஃபன்ஸ் சிஸ்டம்ஸ் ஆளில்லா விமானங்களை அழிக்கும் திறன் கொண்ட ஆயுத அமைப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.

அதாவது Stringer-400 ஸ்ட்ரிங்கர்-400 என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பானது ஆளில்லா விமானங்களை செயலிழக்க செய்து பின்னர் அவற்றை அப்படியே கைபற்றி கொள்ள உதவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைப்பானது 300 மீட்டர் தொலைவுக்குள் வரும் எந்தவொரு ஆளில்லா விமானத்தையும் நோக்கி ஒரு வலையை ஏவி அந்த ஆளில்லா விமானத்தை அப்படியே சுருட்டி தரையில் வீழ்த்தி விடும், இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல ஆளில்லா விமானங்கள் மீது பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த அமைப்பை கொண்டு எல்லை தாண்டிய ஆயுத கடத்தல் மற்றும் போதை பொருள் கடத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களை கட்டுபடுத்த முடியும் என்பது இதனுடைய சிறப்பம்சம் ஆகும்.