அனைத்து நிலபரப்பு வாகனங்கள் வாங்க விருப்ப கோரிக்கை வெளியிட்ட இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • November 12, 2022
  • Comments Off on அனைத்து நிலபரப்பு வாகனங்கள் வாங்க விருப்ப கோரிக்கை வெளியிட்ட இந்திய தரைப்படை !!

இந்திய தரைப்படை ATV All Terrain Vehicle எனப்படும் அனைத்து நிலபரப்பிலும் பயணிக்கும் திறன் கொண்ட வாகனங்களை வாங்க விரும்புகிறது, இதற்காக RFP Request For Proposal எனும் ஆர்வ கோரிக்கையை வெளியிட்டுள்ளது.

இத்தகைய 250 வாகனங்களை அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் வாங்க திட்டமிட்டு உள்ளதாகவும், அவைகளில் 50 முதல் 60% வயை இந்திய பாகங்கள் இருக்க வேண்டும் என்பதும் 4 வீரர்கள் பயணிக்கும் திறன் கொண்டதாகவும் 2 டன்களுக்கு குறைவான எடையும் 600 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

மேலும் இவை 17,000 அடி உயரம் கொண்ட பகுதிகளில் இயங்க வேண்டும் மேலும் இந்திய விமானப்படையின் Mi-26 மற்றும் Chinook போன்ற ஹெலிகாப்டர்கள் இவற்றை சுமக்கும் திறன் கொண்டதாகவும் அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வேகம் மற்றும் 400 கிலோமீட்டர் இயக்க வரம்பு கொண்டவையாக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இந்திய நிறுவனங்கள் இந்த மாதம் 21ஆம் தேதிக்கு முன்னர் தங்களது ஆர்வ கோரிக்கையை சமர்பிக்க வேண்டும் என இந்திய தரைப்படை தலைமையகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.