மிதவை குண்டுகளை ஏவும் வாகனங்கள் வாங்க டென்டர் வெளியிட்ட இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • November 4, 2022
  • Comments Off on மிதவை குண்டுகளை ஏவும் வாகனங்கள் வாங்க டென்டர் வெளியிட்ட இந்திய தரைப்படை !!

இந்திய தரைப்படை சுமார் 100 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் மிதவை குண்டுகளை ஏவுக்கூடிய ஏவு வாகனங்களை வாங்குவதற்காக டென்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது, இதில் மேற்குறிப்பிட்ட ஏவும் அமைப்பு 7.5 டன்கள் எடைக்கு மிகாமல் இருக்கும் 4×4 வாகனம் குறிப்பாக அஷோக் லேலண்ட் ஸ்டால்லியன் Ashok Leyland Stallion வாகனத்தில் பொருத்தும் வகையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 12 மிதவை குண்டுகளை ஏவும் திறன் இருக்க வேண்டும், முதல்கட்டமாக இத்தகைய 10 வாகனங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது, இவற்றுடன் 120 மிதவை குண்டுகளும் வரும் ஒவ்வொன்றும் தலா 8 கிலோ அல்லது அதற்கும் அதிகமான அளவில் வெடிமருந்தை சுமக்க வேண்டும் மேலும் இவை 2 மணி நேரம் தொடர்ந்து 4 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று 2 மீட்டர் துல்லிய திறனுடன் இலக்கை தாக்கி அழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தவிர இந்த தற்கொலை தாக்குதல் குண்டுகளுக்கு கட்டுபாட்டு மையத்துடனான தொடர்பில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது துண்டிக்கப்பட்டாலோ இலக்கை விட்டு மாறாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது கட்டாயமாகும், ஆர்வமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 10ஆம் தேதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.