120 மிதவை குண்டுகள் மற்றும் 10 இலக்கு அறிதல் அமைப்புகளை வாங்கும் பணிகளை துவங்கிய இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • November 4, 2022
  • Comments Off on 120 மிதவை குண்டுகள் மற்றும் 10 இலக்கு அறிதல் அமைப்புகளை வாங்கும் பணிகளை துவங்கிய இந்திய தரைப்படை !!

இந்திய தரைப்படை தற்போது 120 மிதவை குண்டுகள் மற்றும் வானில் இருந்து இலக்குகளை அடையாளம் காணும் 10 Aerial Targeting Systems ஆகியவற்றை சீன எல்லையோரம் தனது பலத்தை அதிகரிக்கும் விதமாக வாங்கும் பணிகளை துவங்கி உள்ளது.

போர்க்கால அடிப்படையில் இந்தியாவிலேயே தயானிக்கப்பட்ட இத்தகைய அமைப்புகளை வாங்க உள்ளதாகவும், நவம்பர் 14ஆம் தேதி இவற்றிற்கான “விருப்பங்களை வரவேற்கும் கோரிக்கை” வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே போல் Aerial Targeting Systems போன்ற அமைப்புகள் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் அடையாளம் காணும் திறன்.கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதும் ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள் டெலிவரி நிறைவு செய்யப்பட வேண்டும் இவற்றில் 60% பாகங்கள் இந்திய தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாகும்.

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சகம் 363 ட்ரோன்களை வாங்குவதற்கான இரண்டு டென்டர்களை வெளியிட்ட நிலையில், இந்திய முப்படைகள் சரக்கு போக்குவரத்து, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் பல்வேறு வகையான ஆளில்லா விமானங்களை வாங்க நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.