ப்ராஜெக்ட் வேதா: நகரும் ஏவுதளங்கள் மற்றும் இதர அதிநவீன அமைப்புகளை உருவாக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • November 15, 2022
  • Comments Off on ப்ராஜெக்ட் வேதா: நகரும் ஏவுதளங்கள் மற்றும் இதர அதிநவீன அமைப்புகளை உருவாக்கும் இந்தியா !!

போர் காலத்தில் தற்போதுள்ள ராக்கெட் ஏவுதளங்கள் தான் முதல் இலக்காகும், அவற்றை எதிரி நாடுகள் தங்களது பலிஸ்டிக் அல்லது க்ரூஸ் ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்துவிட முடியும் அப்படி செய்தால் இந்தியாவால் ராக்கெட்டுகளை ஏவி செயற்கைகோள்களை அனுப்ப முடியாது, இது பெரும் சிக்கலாகி விடும.

ஆகவே இதனை தடுக்கும் வகையில் Project VEDA – VEhicle for Defence Application அதாவது பாதுகாப்பு துறை சார்ந்த ஏவு வாகன திட்டம் ஒன்றை இந்தியா செயல்படுத்தி உள்ளது, இந்த திட்டத்தில் நகரும் ஏவு தளங்கள், நகரும் ரேடார்கள் மற்றும் பல்வேறு இதர அதிநவீன அமைப்புகளை உருவாக்கி வருகிறது.

முதலில் 150 டன்கள் எடை கொண்ட நகரும் ஏவுதளம் உருவாக்கப்படும், பல்வேறு பாகங்களாக உருவாக்கப்படும் இந்த ஏவுதளத்தை 72 மணி நேரத்தில் ஒன்றினைத்து ஏவ வேண்டிய பகுதிக்கு நகர்த்தி ராக்கெட்டை ஏவ முடியும், இந்த ஏவுதளத்தால் 700 கிலோ வரை எடை கொண்ட செயற்கைகோள்களை 700 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும் என கூறப்படுகிறது.

அதே போல ஒரு நகரும் கண்காணிப்பு ரேடார் அமைப்பையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதாவது 250 கிலோமீட்டர் கண்காணிப்பு திறன் கொண்ட ஒரு MOTR Multi Object Tracking Radar எனப்படும் பல இலக்குளை ஒரே நேரத்தில் கண்காணிக்கும் ரேடார் ஒன்று கனரக ராணுவ வாகனத்தில் பொருத்தி பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்படும்.

அதை போல 150 – 700 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை தயாரிக்க உள்ளனர், இவை பல்வேறு பாகங்களாக இருக்கும் ஏவ வேண்டிய உத்தரவு கிடைத்ததும் இவற்றை உடனடியாக ஒன்றிணைத்து குறுகிய காலகட்டத்தில் மேற்குறிப்பிட்ட நகரும் ஏவுதளங்கள் மூலமாக ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இந்தியா Swarm Satellites அதாவது குழுவாக இயங்கும் செயற்கைகோள்களை உருவாக்க உள்ளது, அதாவது கூட்டாக இயங்கும் 20 சிறிய செயற்கைகோள்களை உருவாக்க உள்ளனர், இவை ஒரு பெரிய செயற்கைகோள் செய்யும் பணியை செவ்வனே செய்யும், பெரிய செயற்கைகோள்களை அழிப்பது எளிது ஆனால் இவற்றை அப்படி அளிக்க முடியாது.

இவை தவிர SSTO – Single Stage To Orbit ஒரே நிலை கொண்டு சுற்றுவட்ட பாதையை அடையும் ராக்கெட் மற்றும் TSTO Two Stage To Orbit சுற்றுவட்ட பாதையை அடைய இரண்டு நிலைகளை கொண்ட ராக்கெட் ஆகியவற்றை உருவாக்க திட்டமிட்டு உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.