ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் மிகப்பெரிய அளவிலான பயங்கரவாத ஊடுருவல் முயற்சியை இந்திய தரைப்படை முறியடித்து உள்ளது.
இந்திய தரைப்படை வீரர்கள் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த போது பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டனர் அதையடுத்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பின்னர் இந்திய தரைப்படை வீரர்கள் ஒரு பயங்கரவாதியின் உடலை கைபற்றிய நிலையில் இரண்டு ஏகே47 AK47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி Pistol கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.