
குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் அமைந்துள்ள Physical Research Laboratory எனும் ஆய்வகத்தின் இயக்குனரான அனில் பரத்வாஜ் உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரில் நடைபெற்ற ஆகாஷ் தத்வா கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் இந்தியாவின் ISRO Indian Space Research Organisation அதாவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜப்பான் நாட்டின் JAXA Japanese Aerospace Exploration Agency எனும் ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நிலவை ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும்,
அதன்படி நிலவின் மறு பக்கம் அல்லது இருண்ட பக்கம் அதாவது PSR Permanently Shadowed Regions எனப்படும் நிரந்தரமாக இருள் சூழ்ந்த பகுதிகளை இரண்டு நாடுகளும் இணைந்து ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவற்றில் ஜப்பான் ராக்கெட்டில் வைத்து இந்தியா தயாரித்த தானியங்கி ஆய்வு வாகனத்தை அனுப்பி நிலவின் தென் துருவத்தில் தரை இறக்கி அங்கிருந்து இருண்ட பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்வது தான் திட்டத்தின் இலக்காகும்.
இஸ்ரோ அமைப்பு நிலவை மீண்டும் ஆய்வு செய்ய சந்திரயான்-3 Chandrayaan-3, சூரியனை ஆய்வு செய்ய Aditya L-1 எனும் செயற்கைகோள் மற்றும் வியாழன் கிரகத்தை ஆய்வு செய்யும் திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.