எதிரி ரேடார்களை அழிக்கும் புதிய அதிநவீன ஏவுகணைகள் வாங்கும் இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • November 25, 2022
  • Comments Off on எதிரி ரேடார்களை அழிக்கும் புதிய அதிநவீன ஏவுகணைகள் வாங்கும் இந்திய விமானப்படை !!

இந்திய விமானப்படை தனது நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாக சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பில் Rudram NGARM அதாவது ரூத்ரம் அடுத்த தலைமுறை ரேடார் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கான முன்மொழிவை இந்திய விமானப்படை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது, விரைவில் இது தொடர்பான ஒரு உயர்மட்ட ஆலோசனை நடைபெறும் எனவும் பின்னர் இறுதி முடிவு எட்டப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனவும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய இந்த ஏவுகணைகள் ஏற்கனவே இந்திய விமானப்படையின் Sukhoi-30 MKI சு-30 ரக கனரக பல திறன் போர் விமானங்களில் இருந்து வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை ஏவுகணைகளை கொண்டு எதிரிகளின் ரேடார்களை அழிக்க முடியும் அதுவும் குறிப்பாக அனைத்து வைக்கப்பட்டுள்ள ரேடார்களை கூட அடையாளம் கண்டு அழிக்க முடியும் எனவும் இதன் காரணமாக ரேடார்களிடம் சிக்காமல் எதிரி பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்த முடியும் என கூறப்படுகிறது.

அதிக துல்லியத்துடன் தாக்க உதவும் இந்த ஏவுகணைகளை இந்திய விமானப்படையகன் Mirage-2000 மிராஜ்-2000 மற்றும் சு-30 Sukhoi Su-30 MKI ரக விமானங்களில் பொருத்தி பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.