விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இரவில் தரையிறங்கும் திறனை வெளிபடுத்திய விமானிகள் !!

  • Tamil Defense
  • November 2, 2022
  • Comments Off on விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இரவில் தரையிறங்கும் திறனை வெளிபடுத்திய விமானிகள் !!

இந்திய கடற்படை சமீபத்தில் ஒரு காணொளி ஒன்றை ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது அதில் இந்திய கடற்படை போர் விமானிகள் விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர் கப்பலில் இரவில் தரையிறங்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்தனர்.

இது கடற்படை போர் விமானிகளுக்கு மிகப்பெரிய சவாலாகும் காரணம் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் கப்பலின் மீது அதிவேகத்தில் வரும் போர் விமானத்தை குத்திருட்டில் துல்லியமாக எவ்வித சிக்கலும் ஏற்படாதவாறு தரையிறக்க வேண்டும்.

இதனை Low Overshoot என அழைப்பர், விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர் கப்பலின் ட்விட்டர் கணக்கில் இந்த முறையில் தரை இறங்குவதால் விமானிகளுக்கு தரை இறங்க வேண்டிய கோணம், வேகம் மற்றும் ஒடுதளத்தின் நிலை பற்றிய அறிவு கிடைக்கும் என பதிவிட்டது.

இதை தவிர சாதாரண நிலையில் விமானந்தாங்கி கப்பலில் விமானிகள் தொடர்ந்து தரை இறங்குவதும் அதே வேகத்தில் மீண்டும் மேலேழும்பும் காணொளியும் வெளியிடப்பட்டது இதில் தேர்ந்த பிறகே முழுமையாக தரை இறங்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.