க்ரூஸ் ஏவுகணை சோதனை அறிவிக்கை வெளியீடு !!
1 min read

க்ரூஸ் ஏவுகணை சோதனை அறிவிக்கை வெளியீடு !!

வருகிற 16 – 18 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாள் ஒன்றில் இந்தியா வங்க கடல் பகுதியில் ஒரு ஏவுகணை சோதனையை நடத்த உள்ளதாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது, சோதனை இலக்கு 315 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என கூறப்படுகிறது.

எனவே பாதுகாப்பு நிபுணர்கள் இது ஒரு விமானத்தில் இருந்து ஏவப்படும் க்ரூஸ் ஏவுகணையாக இருக்கலாம் எனவும் அதிகபட்சமாக இது பிரம்மாஸ் – ஏ BRAHMOS – A ஏவுகணையின் மறு சோதனையாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

ஏற்கனவே இது பலமுறை சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இறுதிகட்ட சோதனைகளில் உள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த ஆண்டு தான் இந்தியா தனது வரலாற்றில் அதிக ஏவுகணை சோதனைகளை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.