பலிஸ்டிக் ஏவுகணை சோதனை அறிவிப்பு வெளியீடு !!

  • Tamil Defense
  • November 14, 2022
  • Comments Off on பலிஸ்டிக் ஏவுகணை சோதனை அறிவிப்பு வெளியீடு !!

இந்தியா புதிய பலிஸ்டிக் ஏவுகணைக்கான சோதனை அறிவிக்கையை வெளியிட்டுள்ளது, இந்த மாதம் 23-24 ஆகிய நாட்களில் இந்த சோதனை நடைபெற உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சோதனை வங்க கடலில் நடைபெறும் எனவும் இந்த சோதனையின் இலக்கு சுமார் 2200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என கூறப்படுகிறது ஆகவே இது அக்னி-1பி Agni 1P ஏவுகணையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது சீனாவின் யுவான் வாங் – 5 மற்றும் யுவான் வாங் – 6 ஆகிய கண்காணிப்பு கப்பல்களும் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்க தகவலாகும்.