ரஷ்ய மின்னனு போர் கருவியின் பாகங்களை மாற்ற டென்டர் விட்ட இந்தியா !!

  • Tamil Defense
  • November 8, 2022
  • Comments Off on ரஷ்ய மின்னனு போர் கருவியின் பாகங்களை மாற்ற டென்டர் விட்ட இந்தியா !!

கடந்த செப்டம்பர் மாதம் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் உக்ரைன் படைகள் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ரஷ்ய தயாரிப்பு மின்னனு போர்முறை கருவிகளை கைபற்றியதாக செய்திக வெளியாகின.

இந்த நிலையில் தற்போது இந்திய விமானப்படை தனது போர் விமானங்களில் பயன்படுத்தி வந்த ஐந்த SAP-518 மின்னனு போர் கருவி மற்றும் சுகோய் -30 Su-30 MKI விமானங்களில் பயன்படுத்தப்படும் சோதனை கருவிகளின் பாகங்களை மாற்றவும் டென்டர் வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட மின்னனு பாகங்கள் மற்றும் இந்திய மென்பொருள் ஆகியவற்றை கொண்டு மாற்றியமைக்கவும் இதன் மூலம் திறனை அதிகபடுத்தவும் திட்டமிட்டு உள்ளனர், ஒப்பந்தம் கையெழுத்தான 1 வருடத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.