
இந்திய தனியார் துறை நிறுவனமான Larsen & Toubro லார்சன் மற்றும் டூப்ரோ இந்தோனேசிய கடற்படைக்கு 40 மில்லிமீட்டர் அளவு கொண்ட கனரக துப்பாக்கி தயாரித்து கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இந்த கனரக துப்பாக்கிகளை இந்தோனேசிய கடற்படையின் Teluk Bintuni டெலுக் பின்டுனி ரக நிலநீர் போர்முறை கப்பல்களில் பயன்படுத்த உள்ளனர், இதற்காக சுதர்ஷன் Sudarshan CIWS Close In Weapons Systemஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட TEEVRA தீவ்ரா 40mm துப்பாக்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த தீவ்ரா கனரக துப்பாக்கி ஏறத்தாழ 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை சுட்டு வீழ்த்தும் மேலும் வான் இலக்குகள் என்றால் 4.5 கிலோமீட்டர் தூரம் வரையும் கடற்பரப்பு மற்றும் தரை இலக்குகள் என்றால் 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்கும் என கூறப்படுகிறது.
இந்த தீவ்ரா கனரக துப்பாக்கிகளை கொண்டு அதிவேக ரோந்து கலன்கள், விமானங்கள், கரையில் உள்ள இலக்குகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை தாக்கி அழிக்க முடியும் இவை வெவ்வேறு விதமான 40 மில்லிமீட்டர் L70 ரக கனரக தோட்டாக்களை பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.