
நேற்று பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் Bharat Forge அங்கம் வகிக்கும் கல்யாணி குழுமம் Kalyani Group வெளிநாடு ஒன்றிற்கு பிரங்கிகளை ஏற்றுமதி செய்யும் ஆர்டரை பெற்ற தகவல் வெளியானது.
இது பற்றி அந்த குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 155 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 3 ஆண்டுகளில் 155 மில்லிமீட்டர் அளவு கொண்ட பிரங்கி அமைப்புகளை ஏற்றுமதி செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கல்யாணி குழுமம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் எந்த நாடு என தகவல் தெரிவிக்கப்படாத நிலையில் பாதுகாப்பு நிபுணர்கள் இது அனேகமாக சவுதி அரேபியாவாக தான் இருக்கும் என கூறி வருகின்றனர்.
இதற்கு காரணம் கடந்த 2020ஆம் ஆண்டு கல்யாணி குழுமம் தயாரித்த இரண்டு வெவ்வேறு வகையான சுதேசி பிரங்கி அமைப்புகள் சவுதி அரேபியா நாட்டிற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் தற்போது தான் முதல்முறையாக இந்தியா பிரங்கி அமைப்புகளை மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.