
சமீபத்தில் அர்மீனியா நாட்டிற்கு இந்தியா பினாகா PINAKA பல குழல் ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ராக்கெட்டுகள் மற்றும் பல்வேறு இதர ஆயுத அமைப்புகளை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை பெற்றது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் மீண்டும் அர்மீனியா நாட்டிற்கு ஆயுதங்களை அதாவது பிரங்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது, நேற்று கல்யாணி குழுமம் வெளிநாடு ஒன்றிற்கு பிரங்கி ஏற்றுமதி செய்ய உள்ளதாக வெளியான செய்து இது பற்றியதாகும்.
இந்திய தனியார் துறை நிறுவனமான கல்யாணி குழுமம் Kalyani Group தனது MArG Mountain Artillery Gun மலையக போர்முறை பிரங்கி அல்லது ATAGS பிரங்கிகளை அர்மீனியாவுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
இந்த MArG பிரங்கியானது 155 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட துப்பாக்கியை கொண்டிருக்கும் மேலும் இதனால் 39 காலிபர் திறனுள்ள குண்டுகளை சுட முடியும், இது ஒரு 4×4 லாரியில் பொருத்தப்பட்டு இருக்கும், இதன் எடை 18 டன்கள் ஆகும்.
ATAGS – Advanced Towed Artillery Gun System இது 18-20 டன்கள் எடை கொண்டதாகும், 155 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட துப்பாக்கி மூலம் 52 காலிபர் திறன் கொண்ட குண்டுகளை சுடக்கூடியதாகும், இரண்டுமே 155 மில்லிமீட்டர் பிரங்கிகளாகும் ஆகவே இவற்றில் ஏதேனும் ஒன்று அர்மீனியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்த டெலிவரியும் நிறைவு செய்யப்படும் எனவும் இந்திய தயாரிப்பு பிரங்கிகளை கொண்டு அர்மீனிய தரைப்படை இரண்டு புதிய ஆர்டில்லரி ப்ரிகேடுகளை உருவாக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.