சென்னை: டி90 T90 டாங்கிகளை மேம்படுத்த உள்ள இந்தியா !!

  • Tamil Defense
  • November 21, 2022
  • Comments Off on சென்னை: டி90 T90 டாங்கிகளை மேம்படுத்த உள்ள இந்தியா !!

சென்னை ஆவடியில் உள்ள கனரக HVF Heavy Vehicles Factory அதாவது கனரக வாகன தொழிற்சாலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய முதல் தொகுதி டி90 T90 டாங்கிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் மேற்குறிப்பிட்ட டாங்கிகளில் உள்ள ATT – Automatic Target Tracker எனப்படும் தானாகவே இலக்குகளை அடையாளம் காணும் கருவி, Digital Ballistic Computer மற்றும் APU Auxiliary Power Unit எனப்படும் துணை மின்சக்தி அமைப்பு போன்ற முக்கிய அமைப்புகள் உட்பட பல்வேறு இதர அமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.

ATT, APU ஆகிய அமைப்புகள் அதிநவீன இந்திய தயாரிப்பு அமைப்புகளால் மாற்றியமைக்கப்பட உள்ளன, கூடவே டாங்கை ஊடுருவி வெளியே பார்க்கும் அமைப்பும் சேர்க்கப்படும் , அர்ஜுன் Arjun MBT டாங்கிகளில் பயன்படுத்தப்படும் கட்டளை அதிகாரிக்கான பார்வை கருவி மற்றும் ஒட்டுநருக்கான இரவு பார்வை கருவி ஆகியவை இதில் இணைக்கப்படும் என கூறப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக மேம்படுத்தப்படும் T90 டாங்கிகளில் மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்படும் குறிப்பாக Loitering Munition எனப்படும் மிதவை குண்டுகள், AI Artificial Intelligence எனப்படும் செயற்கை அறிவாற்றல், ட்ரோன்களுடன் இணைந்து இயங்கும் திறன் , அதிநவீன தற்காப்பு அமைப்புகள் ஆகியவை சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.