விரைவில் முதலாவது தேஜாஸ் போர் விமான ஏற்றுமதி ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • November 3, 2022
  • Comments Off on விரைவில் முதலாவது தேஜாஸ் போர் விமான ஏற்றுமதி ஒப்பந்தம் !!

தேஜாஸ் போர் விமானத்தை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சி பி அனந்தகிருஷ்ணன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் இலகுரக தேஜாஸ் போர் விமானம் எகிப்து மலேசியா மற்றும் அர்ஜென்டினா நாட்டு விமானப்படைகளின் போர் மற்றும் முதன்மை பயிற்சி விமான ஒப்பந்த போட்டியில் உள்ளதாகவும் விரைவில் இவற்றில் ஏதேனும் ஒன்று உறுதியாகும் என கூறினார்.

மேலும் அவர் பேசும்போது மலேசிய போர் விமான தேர்வு இறுதிகட்டத்தை எட்டி உள்ளதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் தென்கொரியா இதில் வெற்றி பெறும் என செய்தி வெளியிட்டாலும் விலை வித்தியாசம் காரணமாக இன்னும் இறுதி செய்யப்படவில்லை,

ராயல் மலேசிய விமானப்படை ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தில் உள்ள போர் விமானங்கள் அவற்றின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான அறிக்கையை மலேசிய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்து உள்ளதாகவும் விரைவில் மலேசிய நிதி அமைச்சகம் தனது முடிவை தெரிவிக்கும் அதை பொறுத்தே ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என கூறினார்.

அர்ஜென்டினாவை பொறுத்தவரை அர்ஜென்டினா விமானப்படைக்கு தேஜாஸ் போர் விமானத்தை நன்கு பிடித்துவிட்டது, அவர்கள் நேரில் பார்வையிட்ட போது மிரண்டு விட்டதாகவும் விரைவில் அர்ஜென்டினா பாதுகாப்பு அமைச்சகத்திடம் அவர்கள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாகவும்

முதல்கட்டமாக அர்ஜென்டினா விமானப்படை 12 போர் விமானங்களை வாங்க உள்ளதாகவும் அதை தொடர்ந்து மீண்டும் 12 போர் விமானங்கள் என ஒட்டுமொத்தமாக 24 போர் விமானங்களை வாங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

எகிப்திய விமானப்படைக்கு சுமார் 70 முதன்மை பயிற்சி போர் விமானங்கள் தேவைப்படுகிறது இதையடுத்து இந்தியா தேஜாஸ் போர் விமானங்களை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் எகிப்திலேயே தயாரித்து வழங்க முன்வந்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.