இந்தியா சிங்கப்பூர் விமானப்படை கூட்டுபயிற்சிகள் துவக்கம் !!

  • Tamil Defense
  • November 6, 2022
  • Comments Off on இந்தியா சிங்கப்பூர் விமானப்படை கூட்டுபயிற்சிகள் துவக்கம் !!

கடந்த 3ஆம் தேதியன்று இந்திய மற்றும் சிங்கப்பூர் விமானப்படைகள் இடையேயான 11ஆவது JMT – Joint Military Training கூட்டு ராணுவ பயிற்சிகள் துவங்கி உள்ளன.

இதற்காக சிங்கப்பூர் விமானப்படையை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள், ஒரு C-130 J போக்குவரத்து விமானம் மற்றும் ஐந்து F-16 போர் விமானங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள கலைகுண்டா விமானப்படை தளம் வந்துள்ளன.

சுமார் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்த பயிற்சிகள் சுமார் ஆறு வாரங்கள் நடைபெற உள்ளதாகவும் இருநாட்டு விமானப்படைகளும் பல்வேறு அதிநவீன போர் முறைகளை கையாண்டு பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இந்திய விமானப்படை சார்பில் Su-30 MKI, Mig – 29 UPG மற்றும் இலகுரக தேஜாஸ் மார்க்-1 Tejas Mk1 ஆகிய போர் விமானங்கள் இந்த இருதரப்பு ராணுவ கூட்டு பயிற்சிகளில் கலந்து கொள்ள உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.