அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும் !!
1 min read

அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும் !!

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி காஷ்மீர் மாநில தலைநகர் ஶ்ரீநகரில் நடைபெற்ற காலாட்படை தின விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும் என பேட்டி அளித்த போது தெரிவித்தார்.

தற்போது அதுபற்றி வடக்கு பிராந்திய தரைப்படை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் உபேந்திர த்விவேதி அவர்களிடம் செய்தியாளர்கள் ஊடக சந்திப்பின் போது கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர் அரசு உத்தரவிட்டால் உடனடியாக விரைவாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும் அதற்கு இந்திய தரைப்படை தயாராக உள்ளதாகவும் கூறினார்.

மேலும் பேசும்போது கடந்த 1994ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க வலியுறுத்தும் தீர்மானத்தின்படி தற்போதும் செயல்படுவோம் என கூறியுள்ளார்.

மேலும் அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி பெருமளவில் அதிகரித்து உள்ளதாகவும் ஒரு காலத்தில் சுமார் 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் இருந்த இடத்தில் தற்போது 160 பயங்கரவாதிகள் மட்டுமே உள்ளதாகவும் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது ஆகும்.