சுதேசி தாக்குதல் ஹெலிகாப்டர்களின் ஓ கேமரா எப்படி இயங்குகிறது ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • November 8, 2022
  • Comments Off on சுதேசி தாக்குதல் ஹெலிகாப்டர்களின் ஓ கேமரா எப்படி இயங்குகிறது ஒரு பார்வை !!

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த ரூத்ரா மற்றும் ப்ரச்சந்த் ஆகிய தாக்குதல் ஹெலிகாப்டர்களின் கண்காணிப்பு கேமரா எப்படி இயங்குகிறது என இந்த கட்டுரை அலசுகிறது.

இந்த கேமரா விமானிகளுக்கு தரையில் தொலைதூரத்தில் என்ன நடக்கிறது என்பதை இரவு மற்றும் பகலிலும் துல்லியமாக பார்க்க உதவுகிறது, இந்த கேமராவில் உள்ள சென்சார் எத்தகைய இருட்டிலும் தெளிவான காட்சி அளிக்கும் மேலும் இரவில் சிறப்பாக இயங்கி குறைந்த வெளிச்சத்திலும் நல்ல படங்களை எடுக்கும் திறன் கொண்டதாகும்.

இந்த ஹெலிகாப்டர்களில் ஒரு CCD கேமரா, அகச்சிவப்பு கதிர்களை கொண்டு படமெடுக்கும் கருவி, லேசர் மூலமாக இலக்கின் தொலைவை அளக்கும் கருவி, இரவு பகல் மற்றும் அனைத்து விதமான காலநிலையிலும் இலக்கை துல்லியமாக அடையாளம் காணும் லேசர் கருவி,

மேலும் MTADS Modernized Target Acquisition Designation Sight எனப்படும் அதிநவீன இலக்கு கண்டறிதல் குறிபார்த்தல் கருவி, மலை பிரதேசம் பாலைவனம் காடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலக்குகளை கண்டறிய உதவும் கருவிகளும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் பல்வேறு அதிநவீன ஏவியானிக்ஸ் அமைப்புகளும் உள்ளன, இவற்றை எல்லாம் HAL Hindustan Aeronautical Limited மற்றும் BEL – Bharat Electronics Limited மற்றும் ஒரு தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.