
இந்திய விமானப்படை சீன உடனான எல்லையோரம் குறிப்பாக கிழக்கு லடாக்கில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேச மாநிலம் வரையிலான பகுதியில் ரேடார் வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இதற்காக தற்போது சுமார் 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த பணத்தை கொண்டு ஏற்கனவே உள்ள ரேடார் மையங்களை மேம்படுத்தவும் புதிதாக பல ரேடார் மையங்களை அமைக்கவும் இதற்காக பல அதிக திறன் வாய்ந்த ரேடார்கள் மற்றும் 20 அஷ்வினி ரேடார்கள் ஆகிடவை மேக் இன் இந்தியா Make In India திட்டத்தின் கீழ் வாங்கப்பட உள்ளன.
பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் பேசும் போது பாகிஸ்தான் உடனான எல்லையில் குஜராத் ராஜஸ்தான் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கண்காணிப்பது எளிது ஆனால் காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான பகுதிகளில் உள்ள இமயமலை தொடர் காரணமாக கண்காணிப்பது மிகவும் கடினமாகும்.
ஆகவே தான் இந்த கடினமான நிலபரப்பில் இந்திய விமானப்படை சீன விமானப்படையின் நடமாட்டங்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக ரேடார் மையங்களை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.