ADE Aircraft Development Establishment எனப்படும் வானூர்தி மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்து தயாரித்த ARCHER SR (Short Range) -UAV எனப்படும் குறுந்தூர ஆளில்லா விமானத்தின் சோதனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஆளில்லா விமானங்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் வெற்றிகரமாக இதனுடன் இணைக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டின் பாதிக்கு முன்பாக இந்த ஆர்ச்சர் ஆளில்லா விமானத்தில் இருந்து ஆயுதங்களை பிரயோகம் செய்யும் சோதனைகள் நடைபெற உள்ளன.
இதனையடுத்து மேற்குறிப்பிட்ட சோதனைகளில் பயன்படுத்தி கொள்வதற்காக HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் ஒரு தனியார் துறை நிறுவனத்துடன் இணைந்து நான்கு ஆர்ச்சர் ஆளில்லா விமானங்களை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆர்ச்சர் ரக ட்ரோன்கள் தொடர்ந்து 12 மணிநேரம் பறக்கும் திறன் கொண்டவை ஆகும் மேலும் இவற்றின் இயக்க வரம்பு 220 கிலோமீட்டர் தூரம் ஆகும் துருக்கியின் பைராக்தார் டிபி-2 Bayratkar TB2 ரக ட்ரோன்களை விடவும் சிறப்பானது என கூறப்படுகிறது ஆனால் ஆர்டர் கிடைக்காமல் இது வெற்று கூற்றாகவே இருக்கும் எது எப்படியோ இந்திய முப்படைகளுக்கும் ஏறத்தாழ 100 ஆர்ச்சர் ட்ரோன்கள் தேவை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.