சுதேசி பயிற்சி ஜெட் போர் விமானம் முற்றிலும் புதிய டிசைனை கொண்டிருக்கும் !!

தற்போது இந்திய வகமானப்படை பயிற்சி போர் விமானிகளை பயிற்றுவிக்க இங்கிலாந்திடம் இருந்து BAE Hwak ரக விமானங்களை வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட HLFT – 42 Hindustan Lead In Flight Trainer எனப்படும் சுதேசி ஜெட் பயிற்சி போர் விமானத்தை இந்தியா உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்த விமானத்தின் டிசைன் முற்றிலும் புதிதாக இருக்கும் அதாவது கடந்த 2000 ஆண்டின் நடுப்பகுதியில் HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் HJT-39 எனும் சுதேசி பயிற்சி போர் விமானத்தை உருவாக்க முன்வந்தது அதற்கான டிசைனையும் தயார் செய்தது.

அந்த நேரத்தில் இந்திய விமானப்படை BAE Hawk 132 ரக விமானத்தை பயன்படுத்தி வந்தது, HAL நிறுவனத்தின் HJT-39 மேற்குறிப்பிட்ட விமானத்தின் மலிவான வடிவமாகும் மேலும் இரண்டு விமானங்களுமே AJT – Advanced Jet Trainer அதாவது அதிநவீன ஜெட் பயிற்சி விமான வகையை சேர்ந்தவை ஆகும் ஆகவே இந்திய விமானப்படை ஒரே ரகத்தை சேர்ந்த இரு விமானங்கள் வேண்டாம் என கூறி நிராகரித்தது.

இந்த நிலையில் தான் இந்த HLFT-42 திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது, ஆனால் இதனுடைய வடிவமைப்பு முற்றும் புத்தம் புதிதாக இருக்கும் எனவும் பழைய HJT-39 ( Hindustan Jet Trainer -39) விமானத்தின் டிசைனை அடிப்படையாக கொண்டது அல்ல எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு 5.6 டன்கள் எடையிலான சூப்பர்சானிக் விமானமாகவும், ஒற்றை என்ஜினை கொண்டிருக்கும் எனவும், மாக் 1.4 வேகம் அதாவது மணிக்கு 1783 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் அநேகமாக இந்திய தயாரிப்பு என்ஜினை பெறும் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தேஜாஸ் மார்க்-1/ 1ஏ ரக போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க தயாரிப்பு GE F404-IN20 ரக என்ஜின் அல்லாமல் 73 கிலோ நியூட்டன் ஆற்றல் வெளிப்படுத்தும் இந்திய தயாரிப்பான Kaveri காவேரி என்ஜின் பயன்படுத்தப்படலாம் எனவும் ஆனால் அது முதலில் அதிக உயர பிரதேச சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து அடுத்த 5 ஆண்டுகளில் CEMILAC தர சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகும்.

இவை ஒரு புறம் இருந்தாலும் இறுதிகட்ட வடிவமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன, இது முழுக்க முழுக்க HAL நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் திட்டம் எனவும் தேஜாஸ் பயிற்சி விமானத்தில் இருந்து பெருமளவு வேறுபாடு கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.